

கோலாலம்பூர் மார்ச் 17-
கோவிட் 19 தாக்கத்தினால் நான்கு ஆண்டுகள் தடைபட்டு போன ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி புரட்சி பணி இன்று மீண்டும் புத்தெழுச்சியுடன் ஆரம்பமானது .
கல்வி ஒன்றே நாம் இந்திய சமுதாயத்தின் பிரம்மாஸ்திரம் எனும் தர மந்திரத்தை முன்னிறுத்தி மாணவர்களையும் பெற்றோர்களும் எழுச்சியோடு திருமுருகன் கல்வி நிலையம் தட்டி எழுப்பி உள்ளது.
கடந்த 42 ஆண்டுகளாக 28,000 இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கும் ஸ்ரீ முருகன் கல்வியும் இன்று நேரடி வார வகுப்புகளை மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கி உள்ளது.
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கிடைத்த மகாத்தான அதரவினால் மீண்டும் கல்வி புரட்சியை தொடங்கி உள்ளது என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
இன்று காலையில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளியில் வகுப்புகள் மீண்டும் தொடங்கியபோது ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அழைத்து வந்தனர்.
ஆறாம் வகுப்பு, படிவம் 3 மற்றும் எஸ்பிஎம் மாணவர்களுக்கு ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பாடங்களை போதித்து தருகிறது.
இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா 40 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை ஆரம்பித்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று சிறந்த கல்விமான்களாக விளங்குகிறார்கள்.
அந்த வகையில் வருங்காலத்தில் இன்னும் அதிகமான மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கும் படலத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் மீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கி இருப்பதாக அவர் சொன்னார்.
தற்போதைய கல்வியை மாற்றத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பாடங்களை மட்டும் போதிக்காமல் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மொழியை உள்ளடக்கிய stem – உடன் தரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக வழிநடத்தப் போவதாக சுரேந்திரன் தெரிவித்தார்.
கோலாலம்பூர் முதல் கெடா, பினாங்கு, பேராக் சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் 40 இடங்களில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் தனது வாராந்திர நேரடி வகுப்புகளை தொடங்கி உள்ளது.
பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தங்களது பிள்ளைகளை பதிவு செய்ய விரும்பும் பெற்றோர்கள் ஸ்ரீ கணேஷ் 012-5042837, அசோக் 010-8836981 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.