
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு சுங்கை பூலோ
𝗦𝗔𝗨𝗝𝗔𝗡𝗔 𝗨𝗧𝗔𝗠𝗔 ரம்ஜான் சந்தைக்கு வருகை புரிந்த சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் துணை அமைச்சருமான டத்தோ ஆர். இராமணன் 500 பேருக்கு நோன்பு கஞ்சியை வழங்கினார்.
நோன்பு
கஞ்சி என்பது ரமலான் மாதத்தில் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.
சௌஜானா உத்தாமா பகுதியைச் சுற்றியுள்ள சூராவ் மற்றும் மசூதிகளுக்கும் நோன்பு கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

என்னுடன் இணைந்து மக்களுக்கு நோன்பு கஞ்சியை விநியோகித்த அனைவருக்கும் டத்தோ இரமணன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ரமலான் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் நிரம்பட்டும் என்று அவர் சொன்னார்.