ஜோகூர் பாரு, மார்ச் 18-
மக்கள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை குறித்து எதிர்க் கட்சிகள் துணிந்து நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டும் என்று
சமூக சிந்தனையாளர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு நடப்பு அரசாங்கம் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பது எதிர்கட்சியின் அளப்பரியாத பங்கு.
ஆகவே மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய எதிர்க் கட்சிகள் துணிந்து குரல் எழுப்ப வேண்டும்.இப்போது நாட்டில் உணவு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இது அனைத்து மக்களுக்கும் பெரும் சுமையாக உள்ளது. பொருட்களின் விலையை குறைக்கும்படி எதிர்க் கட்சிகள் போராட வேண்டும்.அரசாங்கத்துடன் இணைந்து இந்த பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் எதிர்க் கட்சிகள் பங்காற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.