லண்டன். மார்ச் 18-
இங்கிலாந்து எப்.ஏ கிண்ணக் கால்பந்து போட்டி கால் இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 4-3 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கிளப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் அனல் பறந்தது.முதல் பாதி ஆட்டத்தில் லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னணி வகித்தது.
பிற்பகுதியில் 87 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2 ஆவது கோலை அந்தோணி அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் கூடுதல் நேரத்தில் மென்செஸ்டரின் 3 ஆவது கோலை ராஸ்போர்ட் அடித்தார்.
பதிலுக்கு லிவர்பூல் கிளப்பின் 3 ஆவது கோலை 105 ஆவது நிமிடத்தில் எலியோட் போட்டார். ஆட்டம் முடியும் தருவாயில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பின் 4ஆவது கோலை டியாலோ அடித்த போது அரங்கமே அதிர்ந்தது.