புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக 350 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 411 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இண்டியா கூட்டணிக்கு 105 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு 77 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். இண்டியா கூட்டணி 2 தொகுதிகள், பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் வெற்றி பெறும். இண்டியா கூட்டணியை சேர்ந்த திமுக – காங்கிரஸுக்கு 30 தொகுதிகள் கிடைக்கும்.
கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ளன. இதில் 25 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆளும் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
கேரளாவில் 20 தொகுதிகள் உள்ளன. இங்கு இண்டியா கூட்டணியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கூட்டணி,காங்கிரஸ் கூட்டணி தனித்தனியாக போட்டியிடுகின்றன. 3-வது அணியாக பாஜகவும் களத்தில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 14, மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 4 தொகுதிகள் கிடைக்கும். பாஜகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக – தெலுங்கு தேசம் – ஜனசேனா கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கு 25 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெறும். ஒய்எஸ்ஆர்காங்கிரஸுக்கு 7 தொகுதிகள் கிடைக்கும்