
சந்தையில் காய்கறிகளின் விலை 25 விழுக்காடு வரை உயர்வு காணும் என எதிர்பார்க்கப் படும் நிலையில் அந்த உணவுப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை அல்லது கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்தை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கொண்டிருக்கவில்லை.
காய்கறிகளின் விலையை வரம்பு மீறி உயர்த்தும் வணிகர்களை அமைச்சு கண்காணித்து வரும் என்பதோடு தவறிழைப்போருக்கு எதிராக கொள்ளை லாபச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையும் எடுக்கும் என்று அதன் துணையமைச்சர் பௌஸியா சாலே கூறினார்.
அமைச்சு எந்த கட்டுப்பாட்டையும் உச்சவரம்பு விலையையும் நிர்ணயிக்காது. ஆனால் அதிகப்படியான லாபம் சம்பாதிக்கும் முயற்சிகளைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் சொன்னார்.