கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
அதனால்தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாக களமிறங்கி உள்ளது.
கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ள திமுக தலைமை அந்த மண்டலத்தில் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.