தமிழகத்தில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மார்ச் 20 முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் இதுவரை கூட்டணி குறித்து இறுதி செய்யாமல் திணறி வரும் தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது