பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக மொத்தம் 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இம்முறை 11 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திமுக வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறன், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், ஸ்ரீபெரும்புதூரில் டி ஆர் பாலு, கள்ளக்குறிச்சியில் மலையரசன், நீலகிரியில் ஆர் ராசா, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடியில் கனிமொழி ஆகியோர் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்.