
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை இன்று முதல் 2 வெள்ளி முதல் மூன்று வெள்ளி வரை குறைகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வாழ்க்கை செலவினை நடவடிக்கை மன்றம் வாயிலாக அரசாங்கம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அதன் அமைச்சர் முகமது சாபு கூறியுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட 10 கிலோ வெள்ளை அரிசியின் நடப்பு விலை 38 வெள்ளியில் இருந்து 45 வெள்ளியாக உள்ளது. மூன்று வெள்ளி புதிய விலை குறைப்பினால் அது 35 வெள்ளியாக குறையும் என்றவர்.