

பத்து காஜா, மார்ச் 21-
ATM முன்னாள் படைவீரர் சங்கம், PDRM படைவீரர் சங்கம் இணைந்து நடத்திய நோன்பு திறப்பு விழா பத்து காஜாவில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் (B) Tuan Suhaimi bin Hj Shafawi Adviser PV ATM Caw Batu Gajah, Dr Hj Abd Nasir b Matori of Imaniah பள்ளிவாசல் தலைவர், Mr Thairun Aris b Mohamad of Kg Bemban தலைவர், Sdra Zulkifli KC PBPM PDRM PDRM, Caw Batu Gajah மற்றும் பத்து காஜா தலைவர் Tuan Hj Rahmani bin Said உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்..
பள்ளிவாசலுடன் படைவீரர் சங்கங்கள் இணைந்து நோன்பு திறப்பு விழாவை வெற்றியடையச் செய்ய முன் வந்தமைக்கு பள்ளி வாசல் தலைவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவக்குமார் தனது சார்பில் 5,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார். பத்து காஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் சிவக்குமாரை அனைத்து இன மக்களும் இன்னமும் நேசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.