சென்னை: தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் இரு முக்கிய வேட்பாளர்களின் பெயர்களில் தமிழ் இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்சென்னையில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று வெளியான பா.ஜ. வேட்பாளர் பட்டியலில் தென் சென்னை வேட்பாளராக தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயரில் மட்டும் அல்லாது இரண்டு பேருக்குமே நிஜவாழ்க்கையிலும் தமிழின் மீது ஆர்வம் உண்டு. தமிழச்சி ஏற்கனவே சில தமிழ் இலக்கியங்களை படைத்துள்ளார்.
தமிழிசையோ தமிழில் சிறந்த பேச்சாளர். எனவே இவர்கள் இவரும் ஒரே தொகுதியில் மோதுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.