இன்று இலங்கையில் மட்டக்களப்பு மாவட்ட , இஸ்லாமியர் அதிகமாக வாழும் காத்தன் குடி பகுதியில் 5,000 இஸ்லாமியருடன் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் , சிறப்பு விருந்தினராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா-வின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்.
இலங்கை கிழக்கு மாகாணம் ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பை ஏற்று டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை வெளியுறவு அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி கலந்து கொண்டு சொல்வேந்தர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்குச் சிறப்பு செய்தார்.
5,000 இஸ்லாமியர் மத்தியில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ சரவணன், அவர்களுடன் அமர்ந்து நோன்பு துறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.