காப்பார் பட்டணத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணியாக வீற்றிருக்கும் தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானுக்கு எதிர்வரும் 25/3/2024ம் திகதி திங்கட்கிழமை 62ம் ஆண்டு பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா நடைபெறுவதற்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு வரும் பக்தமெய்யன்பர்களுக்கு தாகம் தீர்க்கும் வண்ணம் ஓர் அங்கமாக தண்ணீர் பந்தல் கூடாரம் அமைக்கப்படவுள்ளது.
மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையுடன் பாண்டார் பாரு கிள்ளான் மற்றும் மேரு வட்டார இந்திய கிராம தலைவர்கள் இணைந்து மக்களுக்கு தண்ணீர் பந்தல் சேவையை வழங்க உள்ளனர் என்பதனை வட்டார இந்து சங்க பொறுப்பாளர்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.