கிள்ளான் தாமான் கெம்பீரா குடியிருப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புட்சால் கிண்ணக் கால்பந்து போட்டி மிகவும் விமரிசையாக நடைபெற்றது .
மொத்தம் 12 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியை கிள்ளான் தாமான் கெம்பீரா குடியிருப்பு சங்கத்தின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
நான்கு பிரிவுகளில் லீக் பாணியில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
கிள்ளான் தாமான் கெம்பீரா குடியிருப்பு சங்கத்தின் தலைவர் சுரேந்திரன் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்காக இந்த புட்சால் கிண்ணக் கால்பந்து போட்டி நடத்தி வருகிறோம் என்றார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் மற்றும் கிள்ளான் மாவட்ட கவுன்சிலர் யுவராஜா ஆகியோர் போட்டி வெற்றி பெற முழு ஆதரவு வழங்கினர்.
இந்த தருணத்தில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
மேலும் டிசம்பர் மாதத்தில் மீண்டும் புட்சால் கிண்ணக் கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் சொன்னார்.