

கோலாலம்பூர், மார்ச் 23-
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு புக்கிட் பிந்தாங் ராஜா லாவூட் கிளைத் தலைவர் டாக்டர் இராஜசேகர் மோகன் ஆதரவு தெரிவித்தார்.
மஇகாவை மீண்டும் எழுச்சி பாதைக்கு கொண்டு வந்த பெருமை இவரைச் சாரும். இவர் ஏகமனதாக ம.இகா தேசியத் தலைவராக தேர்வு பெறுவதற்கு முழு ஆதரவை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.
மலேசிய அரசியல் வரலாற்றில் ராஜா லாவூட் கிளை மிகவும் பிரபலமானது. டத்தோ வீ.கே.கே. தியாகராஜன் இந்த கிளையின் தலைவராக நீண்டகாலம் இருந்தார்.
இப்போது இந்த கிளையின் தலைவர் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன். சிறப்பான முறையில் கிளையை வழிநடத்தி மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று டாக்டர் இராஜசேகர் மோகன் தெரிவித்தார்.
இன்று ராஜா லாவூட் கிளை ஆண்டுக்கூட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. தலைமையகத்தில் இருந்து அதிகாரியாக அசோகன் ஜெயராமன் மற்றும் புக்கிட் பிந்தாங் தொகுதி சார்பில் பிரதிநிதியாக சண்முகம் கலந்து கொண்டனர்.
புக்கிட் பிந்தாங் தொகுதி துணைத்தலைவர் டாக்டர் ஆர்.டி.உதயகுமாரும் கலந்து சிறப்பித்தார்.