கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலம் விவகாரத்தில் இந்திய அமைப்புகள் ஒன்று திரள வேண்டும்!!

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்கும் முயற்சியை தடுக்க நாட்டில் உள்ள அனைத்து தமிழ் சார்புடைய அமைப்புகளும் ஒன்று இணைய வேண்டும் என தமிழ் ஆர்வலரான திரு சந்திர சேகரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

1936 ஆம் ஆண்டு அந்த கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கு வழங்கபட்ட அந்த நிலத்தில் ஒரு பகுதியை மேம்பாட்டு நிறுவனம் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள வேளையில்,அதனை மீட்கும் முயற்சியில் சட்ட ரீதியாக இறங்கும் என்பதால் அது நிச்சயமாக அவர்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை எனவே,

நாட்டில் உள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்த கின்ராரா தமிழ்ப்பள்ளிக்கான நிலம் பறி போக விடாமல் அரசியல் ரீதியாக தீர்வுகாணும் முயற்சியில் இறங்க வேண்டும் என சமூக ஆர்வலரும்,முன்னாள் பெக்கோ சட்டமன்ற வேட்பாளருமான திரு சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles