இன்றைய தலைமுறையினர் நமது வரலாறு கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசிய டத்தோ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.
அன்மையில் கும்பாபிஷேகம் கண்ட சுங்கை பட்டானி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆலய நிர்வாகமும் சக்தி அறவாரியமும் இணைந்து சோழ பேரரசர் கடாரம் கொண்டான் இராஜேதிரன் சோழன் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் டத்தோ தனேந்திரன் இவ்வாரு வலியுறுத்தினார்.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்கினேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சோழ பேரரசர் இராஜேதிரன் சோழன் திருவுருவச் சிலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
1000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலேசியாவிற்கு வணிகர்களாகவும் உதவுதற்காகவும் வந்திருப்பது வரலாறாகும். இந்த வரலாற்று உண்மையை இன்று நம்மில் பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
இத்தகைய சூழல் இருக்கும் வேளையில் நம் இந்தியர்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மையே மேலோங்கி இருப்பது வருத்தத்தையே அளித்தது.
இந்த நிலையை மாற்றவும் வருங்கால தலைமுறையினருக்கு நமது வரலாற்று பெருமைகளை பரைசாற்றும் வகையிலேயே இந்த முதல் கட்ட முயற்சியை மேற்கொண்டதாக டத்தோ தனேந்திரன் கூறினார்.
உலகின் முதல் அரசன் கடல் கடந்து மற்ற நாடுகளுடன் போர்க்கொண்டு வெற்றி கண்ட அரசன் சோழ பேரரசன் இராஜேந்திரன் சோழன்.
மக்களுக்கும் நாட்டிற்கும் பல நல்ல நல்ல திட்டங்களையும் முன்னேற்றங்களையும் தந்த அரசனாக திகழ்பவன்.
வங்காள விரிகுடாவையே தனது கப்பல் படைகளை நிரம்பச் செய்தவன் நம் சோழ மன்னன் இராஜேந்திரன் சோழன்.
அவர் கண்ட வெற்றி பட்டியலில் இன்று கெடா மாநிலமான கடாரமும் அடங்குகிறது. அதற்கு சான்றாக இன்றும் லெம்பா பூஜாங் விழங்குகிறது.
இத்தகைய பெருமைகள் கொண்ட இராஜேந்திரன் சோழன் வரலாறு அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் தாம் இன்று அவரின் திருவுருவச் சிலையை நிருவியிருப்பதாக டத்தோ தனேந்திரன் கூறினார்.
இராஜேந்திரன் சோழனின் திருவுருவச் சிலையை இன்று அவர் கால் பதித்த கடாரத்திலேயே அதிலும் கெடா மாநிலத்தின் முதல் சிவன் ஆலயத்தில் நிருவியிருப்பது தமக்கு மனம் நிறைவை தந்திருப்பதாக அவர் சொன்னார்.
இது போன்ற நம் தமிழர்களின் வரலாற்று தரவுகளை வரும் தலைமுறையினரக்கு கொண்டு சேர்க்க அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாகவும் டத்தோ தனேந்திரன் தெரிவித்தார்.