லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப் பள்ளிக்கு20,000 வெள்ளியில் தளவாடங்கள்!

நெகிரி செம்பிலான் லாபு வட்டாரத்தில் ஏறக்குறைய 80 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மாபெரும் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விழா சிறப்பாக நடைபெற்றது. ராசா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சா கீ சின் பிரதிநிதியாக சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணசேகரன் பழனிச்சாமி தொடக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் காலை 8 மணி தொடக்கம் பள்ளி வளாகத்தில் திரளாக கூடியிருந்த நிலையில் இங்கு பணிபுரிந்த முன்னாள் ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்சியில் உரையாற்றிய மாண்புமிகு குணா சுற்றுவட்டாரப் பகுதியில் நிறைய வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் வருவதால் எதிர்காலத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உயரும் சாத்தியம் அதிகம் இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் பள்ளிக்கு 5 விவேக தொலைக்காட்சிப் பெட்டிகள் உட்பட சுமார் இருபதாயிரம் ரிங்கிட் மதிப்பிலான தளவாடப் பொருட்களும் வழங்கப்படுவதாக அறிவித்தார். முன்னதாக உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி தேவி, தற்போது 19 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் மாணவர்களை அதிகரிக்க ஒவ்வொரு முன்னாள் மாணவரும் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். பள்ளியின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் திரு. இரா. நவஜீவன் தலமையிலான பள்ளி மேலாளர் வாரியத்தையும் திரு. கே. சற்குணன் தலைமயிலான பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார். மிகவும் குறுகிய காலக்கட்டத்தில் விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்துமுடித்த திரு. ஆ. காளிதாசன் தலைமையிலான முன்னாள் மாணவர்கள் சிறப்பு செயற்குழுவையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமாக முன்னாள் ஆசிரியர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. 1980களில் சுமார் 20 ஆண்டுகள் தலைமையாசிரியாகப் பணியாற்றிய பள்ளியின் சகாப்தம் திருமதி மாணிக்க வள்ளி உட்பட முன்னாள் தலைமையாசிரியர்கள் திரு. இரா. காளிமுத்து , திருமதி K. நல்லம்மாள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் திருமதி. ரோஸ்மேரி , குமாரி. மகேஸ்வரி , திரு. மஸ்லான் , திருமதி. சுந்தரி , திருமதி. சுசிலா ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட நெகிரி மாநில கல்வித்துறை துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் திரு. தனபாலன் மற்றும் சிரம்பான் மாவட்ட கல்வி இலாகா அதிகாரியாக புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும். திரு. ஜெயமுருகன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles