செமினி டொமினியம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவர் மற்றும் உலுவங்காட் தொகுதி மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் சிறப்பு வருகை புரிந்தார்.
அவருடன் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமாரும் கலந்து கொண்டார்.இந்தப் பள்ளியில் இப்போது 15 மாணவர்கள் மட்டுமே பயில்வதாக இடைக்கால தலைமை ஆசிரியர் திருமதி கவிதா தெரிவித்தார்.
இந்தப் பள்ளியில் பயில்வதற்கு மாணவர்களின் வருகையை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார். தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அரசு சார்பற்ற இயக்கங்கள் அரசியல் கட்சிகள் உதவி புரிய வேண்டுமென டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
டொமினியம் தோட்டத் தமிழ் பள்ளிக்கு எங்களால் முடிந்த அளவு உதவிக்கரம் நீட்டுவோம் என்றார் அவர்