குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. சென்னை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை குஜராத் விரட்டியது. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் 2 போட்டிகளில் விளையாடி அந்த இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles