
காப்பார் மார்ச் 27-
காப்பார் வட்டாரத்தில் பிராப்டன் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 30 மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் காப்பார் மைபிபிபி தொகுதி தலைவர் தலைவர் கதீர் தலைமையில் நோட்டு புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சிவகாமி மற்றும் மாணவர்களிடம் இந்த நோட்டுப் புத்தகங்கள் நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.
காப்பார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க நாங்கள் எப்போதும் பக்கபலமாக இருப்போம் என்று கதீர் தெரிவித்தார்