ஷா ஆலயில் உள்ள கூட்இயர் தொழிற்சாலை மூடப்படவிருப்பதை தொடர்ந்து பாதிக்கப்படவிருக்கும் அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு 22 உள்நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்.
அந்நிறுவனங்கள் கூட்இயர் நிறுவனத்தில் இதற்கான முகப்பிடங்களை திறக்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அந்த தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அந்த நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக அவர் கூறினார்.
எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக முகப்பிடங்களை கூட்இயர் தொழிற்சாலையிலேயே திறப்பதற்கு அந்த 22 நிறுவனங்களும் முன்வந்ததாக அவர் தெரிவித்தார்.