கிளானா ஜெயா ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் அண்மையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் மற்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
ஆலய நிர்வாகத்தினர் இவர்களுக்கு சிறப்பு செய்தனர்.
ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.