மாரான் மரத்தாண்டவர் ஆலய பங்குனி உத்திரத் திருவிழா அண்மையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மாரான் மரத்தாண்டவர் ஆலய தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் தலைமையில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மற்றும் சபாய் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழச்சி காமாட்சி ஆகியோர் ஆலயத்திற்கு வருகை புரிந்த போது ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச் செல்வம் தலைமையில் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.