பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்ற அரசாங்கம் முன் வர வேண்டும் என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
நாடு தழுவிய அளவில் 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் குறைய கூடாது.
அதேசமயம் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகள் எந்த வகையிலும் மூடப்படக்கூடாது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இந்த பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசாங்கம் முன் வர வேண்டும்.
தமிழ் உணர்வுள்ள தமிழ் அமைப்புகள் இந்த பள்ளிகளை இடமாற்றம் செய்ய போராடி வருகின்றன.
அரசாங்கமும் கல்வி அமைச்சும் தனி கவனம் செலுத்தி இந்த பள்ளிகளை காப்பாற்ற உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்