ம இகாவின் தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மலேசிய இந்தியர் குரல் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு மிகச்சிறந்த சேவையாளர். கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தும் அவர் தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மலேசிய இந்தியர் குரல் தலைவர் மணிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எனது நீண்ட கால நெருங்கிய நண்பர். அவர் மக்களுக்கு சேவையாற்றுவதில் சிறந்தவர்.
எம்ஐஇடி மூலம் ஆயிரக்கணக்கான இந்திய பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி நிதியை வழங்கி புதுவையை புரிந்துள்ளது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்