சபா பெர்ணாம் திருமுருகன் ஆலயத்தில் அண்மையில் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சபா பெர்ணாம் வட்டாரத்தில் உள்ள இந்து பெருமக்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சார்பில் டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் முக்கிய பிரமுகராக கலந்து கொண்டார்.
சபா பெர்ணாம் திருமுருகன் ஆலய நிர்வாகம் சார்பில் இவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சார்பில் சபா பெர்ணாம் திருமுருகன் ஆலயத்திற்கு 15,000 வெள்ளி மானியத்தை சுரேஸ் சிங் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.