சுங்கை பூலோ மார்ச் 30-
மித்ராவை வைத்து அரசியல் நாடகம் நடத்துவதை ஒற்றுமை துறை துணைமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று துணை அமைச்சர் டத்தோ இரமணன் இன்று சவால் விடுத்தார்.
உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். நான் என் வேலையை செய்கிறேன்.
அரசாங்க பணியாளர்களுடன் பப்பில் கூட்டம் நடத்தினேன் என்று என் மீது ஏன் அவர் குற்றம் சாட்ட வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கடந்தாண்டு மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தற்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது
குறிப்பாக மித்ரா நடவடிக்கைக் குழு கூட்டத்தை பப்பில் நடப்பட்டது என்று துணையமைச்சர் சரஸ்வதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது முற்றிலும் பொய்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல அரசாங்கத் துறை அதிகாரிகளுடன்தான் ஒவ்வொரு கூட்டமும் நடத்தப்படும்.
இந்தக் கூட்டத்தை யாராவது பப்பில் நடத்துவார்களா? இந்தக் குற்றச்சாட்டில் ஏதாவது உண்மை இருக்குமா?
இக் குற்றச்சாட்டு உண்மையானால் அதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடட்டும். நான் பதவி விலகுகிறேன்.
அப்படி நிரூப்பிக்க முடியவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும் என்று டத்தோ ரமணன் சவால் விடுத்தார்.
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி முன் வைக்கும் குற்றச்சாட்டு கள் என்னை மட்டுமல்ல பிரதமரையும் பாதிக்கும்.
அவர் அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் . காரணம் நாம் எல்லாம் ஒரே கட்சி என்று அவர் சொன்னார்.
மித்ராவை மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்ற பிரதமரிடம் கோரிக்கை வைப்பேன் என்றார் அவர்.