நாட்டில் தலைசிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் சுங்கை பூலோ
தேசிய வகை சரஸ்வதி தமிழ்ப்பள்ளி அளவிலான குறுக்கோட்டப் போட்டி சுங்கை பூலோ PKKN பொது மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்த போட்டியில் மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குமரகுரு தலைமையில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு உணவு, கனிமநீரை ஏற்பாடு செய்து பேருதவி புரிந்துள்ளனர்.
சுமார் 60 பெற்றோர்கள் இந்த போட்டி சிறப்பாக நடந்தேருவதற்கு பெரும் துணையாக இருந்துள்ளனர் என்று குமரகுரு தெரிவித்தார்.
மைலோ வேன் வந்திருந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இலவச குளிர்ந்த மைலோ பானம் வழங்கியது.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
குறுக்கோட்டப் போட்டிச் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரன் இரத்தினம், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரகுரு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.