“பிரதமர் மோடிக்கு சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன். போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பாஜகவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது.
இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?” என்று சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பிரதமர் மோடிக்கு மத்திய உளவுத் துறை கொடுத்திருக்கும் ‘ரிப்போர்ட்’ காரணமாக பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்” என்றும் அவர் கூறினார்.