எம்.பவளம்
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மூடா கட்சி சார்பில் டாக்டர் சிவப்பிரகாஷ் இராமசாமி மீண்டும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் இவருக்கு 1,186 வாக்குகள் கிடைத்தன.
பெரிக்கத்தான் நேஷனல் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கட்சிகள் இடையே மூடா கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது.
இப்போது டாக்டர் சிவப்பிரகாஷ் தீவிரமாக கோலகுபு பாருவில் களம் இறங்கி வேலை செய்து வருகிறார். மக்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலில் மூடா கட்சி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.