கோலாலம்பூர் ஏப்ரல் 3-
திவாலானோருக்கு மறு வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் 40,000 பேர் திவால் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்று தேசிய திவால் துறை தலைமை இயக்குனர் Bakri Abd Majid தெரிவித்தார்.திவால் பட்டியலில் இருந்து விடுபட்டது அவர்களுக்கு புதியதொரு வாழ்க்கை கிடைத்திருப்பதாக உணர்கிறார்கள்.
இவ்வாண்டு இறுதிக்குள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் இருந்து விடுவிக்க அரசாங்கம் இலக்கு வைத்திருக்கிறது என்றார் அவர்.
- பெர்னாமா