
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
கடந்த மார்ச் மாதம் பேராக் மஞ்சோங் மைடின் பேராக் பேரங்காடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நீதி உதவியை வழங்கினார். பிரதமரின் அரசியல் செயலாளர் முகமட் காமில் மூலம் இன்று பாதிக்கப்பட்ட வணிகர்களிடம் நிதி உதவி வழங்கப்பட்டது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு இந்த நிதியுதவி சுமையை குறைக்க உதவும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- பெர்னாமா