புத்ரா ஜெயா, ஏப்ரல் 3-
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவை (மித்ரா) மீண்டும் பிரதமர் துறையின் (பிஎம்டி) கீழ் வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் அமைச்சருமான Fahmi Fadzil இன்று அறிவித்தார்.
இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் ஆகியோரால் கூட்டாக முடிவு செய்யப்பட்டது என்றார்..
கடந்த ஆண்டு மித்ரா பிரதமர் துறையின் கீழ் இயங்கியது
ஆனால் இவ்வாண்டு ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் மித்ரா வைக்கப்பட்டது.
இதை மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்ற வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மித்ராவின் நிர்வாகத்தை பொறுப்பேற்ற பிறகு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பின்னடைவை சந்தித்தது,.
“மித்ராவின் நோக்கம் தெரியவில்லை” என்று அமைச்சர் ஆரோன் கூறியதை அடுத்து அவர் பதவி விலகுமாறு மூன்று இந்திய குழுக்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.
- பிரி மலேசிய டூடே