செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடி பார்வையில் மித்ராவை மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது சரியான முடிவு என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தெரிவித்தார்.ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் இருந்த மித்ரா இப்போது மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்ற அமைச்சரவை முடிவு செய்ததாக அமைச்சர் பாமி பட்சில் இன்று அறிவித்திருக்கிறார். இதன் மூலம் பித்ரா விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று மனித வள முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடி பார்வையில் மித்ரா சிறப்பாக செயல்பட வேண்டும். இதன் மூலம் இந்திய சமுதாயம் நன்மையடை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்