செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 3-
மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு மைபிபிபி சிலாங்கூர் மாநில உதவித் தலைவர் மற்றும் உலுவங்காட் தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இன்று பிறந்தநாளை கொண்டாடி மகிழும் டத்தோ டாக்டர் லோகபாலா எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்.
அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய டத்தோ டாக்டர் லோகபாலா தொடர்ந்து அனைத்து இன மக்களுக்கும் மகத்தான முறையில் சேவையாற்றிட இறைவன் அவருக்கு அருள் புரிய வேண்டும் என டாக்டர் சுரேந்திரன் தமது பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் குறிப்பிட்டுள்ளார்.