பாஜகவுக்கு எதிராக திருமாவளவன் – கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம்

சிதம்பரம்: ஏப்ரல் 4-
“ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான், நான் தம்பி திருமாவளவனோடு தோள் உரசி களம் கண்டிருக்கிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த முறை பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள்.

அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டே ஆக வேண்டும்” என்று சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles