கோலாலம்பூர் ஏப்ரல் 4-
வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் மலேசியாவில் புற்றுநோய் சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அவற்றை தடுக்க சுகாதார அமைச்சு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இலக்கு வைத்திருப்பதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுக்கானிஸ்மான் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பு ஊசியும் 13 வயதான பெண்களுக்கு எச். பி.வி. தடுப்பூசியும் வழங்குவதன் வழி தேசிய தடுப்பூசி திட்டம் நாடு முழுவதிலும் சுகாதார சிகிச்சை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை சேவையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோயை தொடக்க கட்டத்திலேயே அடையாளம் கண்டு சிகிச்சையை தொடங்க பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று நேற்று மேலவையில் அவர் தெரிவித்தார்.
-பெர்னாமா