ஷா ஆலம், ஏப் 4: பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள 41 மசூதிகள் மற்றும் சூராவ்களுக்குக் கோத்தா கெமுனிங் தொகுதி RM46,500 ஒதுக்கீடு செய்தது.
இந்த நன்கொடையானது அடிப்படை தேவைகளை வழங்குவது மற்றும் உள்ளூர் சமூகத்திற்கான மத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்டது என சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ் கூறினார்.
“இந்த நன்கொடை மசூதிகள் மற்றும் சூராவ்களின் பராமரிப்பு, பொதுத் தேவைகள் வாங்குதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காகப் பயன்படுகிறது.
“நமக்கு வழங்கப்படும் உதவிகளைப் பாராட்டவும், அன்பை நீட்டிக்கவும் ரம்ஜான் மாதம் கற்றுக்கொடுக்கிறது. எனவே, தேவைப் படுபவர்களுடன் நமது வாழ்வாதாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- Selangor kini