புத்ரா ஜெயா, ஏப்ரல் 4-
பொருட்களின் விலை உயர்வை கண்காணிக்க அமைச்சர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதன் தரத்தை தெரிந்து கொள்ள அமைச்சர்கள் நேரடியாக களம் இறங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்தார் என்று அவர் சொன்னார்.
- பெர்னாமா