செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 4-
வசதி குறைந்த மக்களுக்கு தன்னலம் கருதாமல் உதவிகளை வழங்கி வரும் கோலாலம்பூர் மா பகாவதி அம்மன் இயக்கம் நேற்று முன்தினம் கால்களை இழந்த இரு இந்திய பெண்களுக்கு சக்கர நாற்காலியை வழங்கி பேருதவி புரிந்தது.
கம்போங் பண்டான் மணல் மேடு பகுதியைச் சேர்ந்த திருமதி மார்க்கிரேட் என்பவர் நோயினால் இரு கால்களையும் இழந்து விட்டார்.
போர்ட் கிள்ளானைச் சேர்ந்த தீனா டாப்பினி ஜோர்ஜ் என்பவரும் இனிப்பு நோயினால் ஒரு காலை இழந்துள்ளார்.
இவர்களின் துன்பத்தை கேட்டறிந்த மா பகாவதி அம்மன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி மகேஸ்வரி உடனடியாக இருவருக்கும் சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து ஒப்படைத்திருக்கிறார்.
நேற்று முன்தினம் திருமதி மகேஸ்வரியிடம் இருந்து சக்கர நாற்காலிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
தக்க நேரத்தில் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திருமதி மகேஸ்வரி மற்றும் மா பகாவதி அம்மன் இயக்கத்திற்கு அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.