செ வே. முத்தமிழ் மன்னன்
புத்ரா ஜெயா, ஏப்ரல் 4-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும்.
அதேசமயம் வாக்களிப்பு வரும் மே 11 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
முன் கூட்டியே வாக்களிப்பு வரும் மே 7 ஆம் தேதி நடைபெறும்..
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லீ கீ ஹோங் காலமானதை தொடர்ந்து இப்போது அந்த தொகுதி காலியாகி விட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மொத்தம் 40,226 வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். 2023 இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே.தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை பின் பற்றி நடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது