செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர்: ஏப்ரல் 4-
அதிகாரம் என்பது ஒரு நம்பிக்கையே அன்றி சலுகை அல்ல, அது மக்களுக்குச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நினைவுபடுத்தினார்.
சரியான, துல்லியமான மற்றும் பொருத்தமான நிலைக்கு கெஅடிலான் கட்சி திருப்புவதற்கான முயற்சியாகும். எனவே, கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் முதன்மையாக இருக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சி தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கொடுக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் நாம் மேற்கொள்ள வேண்டிய நம்பிக்கைகள்” என்று பிகேஆரின் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் கெஆடிலான் கட்சியின் 25 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.