வேலைவாய்ப்பு மோசடிக் குற்றங்கள் உலகலாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதால் இவ்விவகாரத்தை முக்கிய நிகழ்ச்சி நிரலில் கொண்டு வர உச்சநிலை மாநாட்டின் தலைவர் என்ற முறையில் மலேசியா முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அடுத்தாண்டு நாங்கள் தலைமை தாங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் இந்தத் தலைப்பை சேர்ப்பதில் மிகவும் முன்னோக்கிச் சிந்திக்கும் ஆசியான் நாடாக நாங்கள் விளங்குகிறோம். இந்த மாநாட்டில் இடம்பெற்ற 10 முதன்மை நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக வேலைவாய்ப்பு மோசடி என்ற தலைப்பைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்தவர்கள் நாங்கள்தான் என அவர் சொன்னார்.