மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு, ஏப்ரல் 5-
விரைவில் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மீண்டும் அந்த தொகுதியில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று மலாக்கா மாநில கெஅடிலான் துணை தலைவர் மற்றும் ஜாசின் தொகுதி தலைவர் ஜெகதீசன் ராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க திரண்டு வாருங்கள்.
மே 11 ஆம் தேதி வாக்களிப்பு தினத்தில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றியை உறுதி செய்ய கடுமையாக உழைப்போம்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி பக்கத்தான் ஹராப்பான் கோட்டை என்பதை நிரூபிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார் அவர்.