புத்ராஜெயா, ஏப் 5 – கோலகுபு பாரு இடைத்தேர்தல் தொடர்பான விஷயங்களை விவாதிப்பதற்கும் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்கக்கூடிய பொருத்தமான வேட்பாளரை இறுதி செய்வதற்கும் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) விரைவில் கூட்டத்தை நடத்தும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான தேதியை தீர்மானிப்பதற்காகப் பிரதமரும் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கவுள்ளதாக அவர் சொன்னார்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் பட்டியலை பரிசீலிப்போம். பின்னர் தேர்தல் இயந்திரம், தேர்தல் பணிகள் தொடர்பான விஷயங்களை விவாதிப்போம் என்றார்.
சிலாங்கூரின் கோல குபு பாரு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 11ஆம் தேதி நடைபெறும் என்றும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
_ Bernama