
கோலாலம்பூர், ஏப் 5 – கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவருடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருபத்தெட்டு முதல் 41 வயதுக்குட்பட்ட நால்வரும் நேற்று ஜோகூரில் உள்ள ஸ்கூடாய் மற்றும் கெலாங் பாத்தாவில் கைது செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
ஜோகூரில் நேற்று மேலும் நான்கு நபர்களை நாங்கள் கைது செய்தோம், அவர்கள் இந்த வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணைக்கு உதவ முடியும் என்று நம்புகிறோம்.
பிரதான சந்தேக நபரான 36 வயதான இஸ்ரேலிய நபர் உட்பட எட்டு பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
_ utusan