கோத்தா ராஜா மற்றும் காப்பார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதிகளுக்கு
ம இகா குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் அமானா தலைவர் முகமட் சாபு மீண்டும் போட்டியிடுகிறார்.
மலேசியாவில் பிரபலமான அரசியல்வாதியாக விளங்கும் இவர் அதிக வாக்குகளில் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.
அதேபோல் காப்பார் நாடாளுமன்ற தொகுதியில் அப்துல்லா சனி அல்லது வேறொருவர் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
காப்பார் நாடாளுமன்றம் கெஅடிலான் கோட்டையாக விளங்குகிறது.
இவ்விரு தொகுதிகளில் வெற்றி பெறுவது கடினம் என்பதால் அதற்கு பதிலாக வேறு தொகுதிகளை பெறுவதற்கு ம இகா தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.