பிரிட்டனின் புதிய பிரதமராக ஒரு இந்தியர் ரிஷி சுனக் பதவியேற்று சாதனை படைத்திருக்கிறார்.
அந்த வகையில் மலேசியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மலேசியா இந்தியர்களால் முடியும் என்பதால் வாக்களிப்பு தினத்தில் அவர்கள் திரண்டு வர வேண்டும் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சி அமைக்க மலேசியா இந்தியர்கள் வாக்குகள் மிகவும் முக்கியமானது.
22 மாதங்கள் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை அமைத்தால் இந்தியர்கள் உட்பட அனைத்து இன மக்களும் அதிக நன்மைகள் கிடைக்கும்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடக்கும் வாக்களிப்பு தினத்தில் மலேசியா இந்தியர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.